​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்.. 10 ஆண்டு பின் மீண்டும் ஆர்.எல்.டி. -பாஜக கூட்டணி

Published : Mar 31, 2024 7:33 AM

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்.. 10 ஆண்டு பின் மீண்டும் ஆர்.எல்.டி. -பாஜக கூட்டணி

Mar 31, 2024 7:33 AM

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் இன்று மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் தமது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

நடிகர் அருண் கோவில் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சௌத்ரியும் மோடியுடன் மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

சௌத்ரியின் தந்தை சரண்சிங்கிற்கு சனிக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பாரத ரத்னா வழங்கியுள்ளார்.

குஜராத்தி மற்றும் ஜாட் இனத்தவர் அதிகமாக உள்ள மீரட் தொகுதியில் ஆர்.எல்.டி கட்சியுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.