​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"வீர சாவர்க்கர் பற்றி படிக்காமல் தவறான கருத்துகளைக் கூறுகிறார் ராகுல்" - பட்னாவிஸ்

Published : Mar 31, 2024 7:08 AM

"வீர சாவர்க்கர் பற்றி படிக்காமல் தவறான கருத்துகளைக் கூறுகிறார் ராகுல்" - பட்னாவிஸ்

Mar 31, 2024 7:08 AM

மும்பையில் சாவர்க்கர் வாழ்க்கையை சித்தரிக்கும் ஸ்வதந்திர வீர சாவர்க்கர் படத்தின் திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், நடிகர்கள் ரந்தீப் , அங்கீதா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்நாவிஸ், ராகுல் காந்திக்கு சாவர்க்கர் பற்றிய தவறான கருத்துகள் உள்ளதாகவும்..,

இந்தப் படத்தைப் பார்த்தால் தெளிவு பிறக்கும் என்றும் கூறினார். இப்படத்தைப் பார்க்க ராகுல் காந்தி விரும்பினால் தமது சொந்த செலவில் திரையரங்கம் முழுவதையும் முன்பதிவு செய்து தரத்தயார் என்றும் பத்னாவிஸ் தெரிவித்தார்.