​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்...

Published : Mar 30, 2024 6:09 PM

தமிழகத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்...

Mar 30, 2024 6:09 PM

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், மங்கம்மாபேட்டையில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்தில், எள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்த பிறகு பிரசாரத்தை தொடங்கினார் 

 நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், கீழையூர் பகுதியில் பிரசாரம் செய்தபோது கன்னித்தோப்பு கடை வீதியில் உள்ள டீ கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.  

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி, பேராவூரணி அடுத்த இடையாத்தி தெற்கு பகுதியில் வயலில் நடவுப் பணியில் ஈடுபட்ட பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.  

கோயம்புத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.ஜெயராம் வாக்கு சேகரித்தார். சிறு, குறு தொழில் முனைவோரை சந்தித்து வாக்கு கேட்டபோது, மின்கட்டண உயர்வு குறித்து அவர்கள் முறையிட்டனர். 

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், வண்ணான் குண்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.