தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆயிரத்து 200 பேருக்கு தரமான இலவச கல்வி வழங்கப் போவதாக பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க கூட்டணியின் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர், வாக்குக்காக இலவசங்களை வழங்கும் போக்கு தொடர்ந்தால், தமிழகம் திவாலாகி விடும் எனவும் கூறினார்.