கோவையில் குடிநீர் பஞ்சம் நிலவுவதாகவும், அரசியலைத் தாண்டி சிறுவாணி தண்ணீரைப் பெற கேரள அரசுடன் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அவர், பேரூர் மட ஆதீனம் மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஆன்மீகத்தையும், அரசியலையும் பிரித்து பார்க்கக்கூடாது என்றார்.