பிரதமர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம்.. தோல்வி பயத்தில் ஏதேதோ பேசுவதாக விமர்சனம்
Published : Mar 24, 2024 4:40 PM
பிரதமர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம்.. தோல்வி பயத்தில் ஏதேதோ பேசுவதாக விமர்சனம்
Mar 24, 2024 4:40 PM
மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்ற பதற்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என்று பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 23 ஆண்டுகளாக தோல்வியையே காணாத பிரதமர் மோடிக்கு இனி எப்போதும் வெற்றிதான் எனவும், தோல்வி பயம் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி தலைவர்களுக்குதான் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.