ஜனநாயகத்தை காப்பாற்ற பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தியாக வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், ஜனநாயகத்தை பற்றிப் பேச முதலமைச்சருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை சரவணம்பட்டியில் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது பணம் சம்பாதித்த காண்ட்ராக்டர்கள் பலர் அந்த கட்சி சார்பில் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்றும், கோவையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட 30 சதவீதம் கமிஷன் அடித்துள்ளனர் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.
குளுகுளு கோவையில் 2 சதவீதம் அளவுக்கு வெப்பம் அதிகரித்திருப்பதற்கு திராவிட கட்சிகளே காரணம் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.