உலக பூமி தினத்தை முன்னிட்டு நேற்று வரலாற்று பிரசித்தி பெற்ற கட்டடங்களில் ஒருமணிநேரம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.
டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் ஒருமணி நேர இருட்டிற்குப் பின்னர் மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. இதே போன்று அக்சர்தாம் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பின்னர் ஒளிரவிடப்பட்டது
மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் இருள் சூழ்ந்த நிலையில் மின் விளக்குகள் எரிந்தன.
கேரள சட்டமன்றக் கட்டடமும், பெங்களூரில் உள்ள கர்நாடக சட்டமன்ற கட்டடமான விதான் சௌதாவிலும் ஒருமணிநேரம் விளக்கு அணைக்கப்பட்டு, பின்னர் ஒளிரூட்டப்பட்டது.