திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த கல்யாண மண்டபத்துக்குள் புகுந்து ஒரு மணி நேரம் பொறுத்துக்கங்க... நாங்க வேட்பாளர் அறிமுககூட்டம் நடத்திக்கிறோம் என்று கல்யாண கோஷ்டியுடன் ஆரணி அதிமுகவினர் மல்லுக்கட்டிய காட்சிகள் தான் இவை..!
3 மாதத்திற்கு முன்பே தாங்கள் கல்யாண மண்டபத்தை பணம் கொடுத்து புக் செய்து விட்டதாக திருமண கோஷ்டி கூற, ஒரு ஓரமாக வேட்பாளரை நிற்கவைத்து அறிமுகப்படுத்திட்டு போயிடுறோமே என்று ஓசியில் மண்டபம் கேட்ட கட்சியினர் கூற இடமே அமர்களமானது
இதனை காரில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துச்சென்ற தேர்தல் அதிகாரியை மறித்து கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் புகார் அளிக்க , ஒன்லி பணத்தை மட்டும் தான் பிடிபோம் என்பது போல அந்த அதிகாரி அங்கிருந்து நழுவினார்
நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த அதிமுகவினர் கல்யாண மண்டபத்தை விட்டு இறங்கி சாலைக்கு வர, வேட்பாளர் ஜிவி கஜேந்திரனும் அங்கு வந்து விட்டார். அவரை அப்படியே ஓரமாக போய் பேசலாம் என்று அழைத்துச்சென்றனர்
அந்த திருமண மண்டபத்துக்கு பின்புறமுள்ள முட்டுச்சந்தில் திரண்ட தொண்டர்கள் முன்னிலையில் தெரு விளக்கு வெளிச்சத்தில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்
தெருமுனை பிரச்சாரக்கூட்டம் போல அந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடந்து முடிந்தது.