மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை அவதூறாக பேசி வருவதாகவும் அவ்வாறு தொடர்ந்து பேசினால் அதிமுக சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.