பாஜக மத அரசியல் செய்வதாக உருவாக்கி வைக்கப்பட்ட பொய் பிம்பங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உடைத்து எறியப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, 6 இஸ்லாமிய நாடுகள் பிரதமர் மோடிக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி இருப்பதாகவும், இது தெரியாதவர்கள், புரியாதவர்கள் பாஜக மத அரசியல் செய்வதாக கூறுவதாகவும் கூறினார்.