​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சி.ஏ.ஏ குறித்த பொய்யை பிரசாரத்தால் முறியடிப்போம்: டி.டி.வி.தினகரன்

Published : Mar 13, 2024 10:56 AM

சி.ஏ.ஏ குறித்த பொய்யை பிரசாரத்தால் முறியடிப்போம்: டி.டி.வி.தினகரன்

Mar 13, 2024 10:56 AM

சிஏஏ சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பொய் பிரசாரத்தை தெருத் தெருவாக பிரசாரம் செய்து முறியடிப்போம் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னையில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் சந்தித்து தேர்தல் ஆலோசனை நடத்திய பின்னர் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், சிஏஏ இங்கு இருப்பவர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல, அகதிகளாக வந்திருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் என கூறினார்.

தாங்கள் கேட்டுள்ள குக்கர் சின்னம் கிடைத்து விடும் எனவும் அதில் தான் போட்டியிடுவோம் எனத் தெரிவித்த டி.டி.வி தினகரன், தங்களை வேறு சின்னத்தில் நிற்கச் சொல்லி யாரும் நிர்பந்திக்கவில்லை எனக் கூறினார்.