​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் 4 மாநிலங்களில் மோடி சுற்றுப்பயணம்

Published : Mar 09, 2024 6:10 AM

பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் 4 மாநிலங்களில் மோடி சுற்றுப்பயணம்

Mar 09, 2024 6:10 AM

பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இடாநகரில் வடகிழக்கு மாநிலங்களுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தொடர்ந்து அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 4,500 கோடி ரூபாய்க்கும் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

மாலை 7 மணியளவில் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயில் வழிபாடு நடத்தியபின் பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்துகிறார்...