அசாமில் ஊருக்குள் யானைகள் அடிக்கடி புகுவதைத் தடுக்க உறுதி அளிக்கும் கட்சி மற்றும் வேட்பாளருக்குதான் வாக்களிப்போம் என கஜிரங்கா தொகுதி வாக்காளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
கோலாகாட் மாவட்டத்தில் வரும் கஜிரங்கா வனப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யானை - மனித மோதல் தொடர்கதையாக உள்ளது. உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் தாக்கி பலர் உயிரிழப்பதுடன் பயிர்கள், வீடுகளும் சேதமடைவதாக கூறும் மக்கள், இப்பிரச்னையை தீர்க்க உதவும் வேட்பாளருக்கே கட்சி வேறுபாடின்றி வாக்களிப்போம் என அறிவித்துள்ளனர்.