​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசாம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி

அசாம் மாநில உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அசாமில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அதிக இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க மீது நம்பிக்கை...

அசாம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் குண்டு வெடிப்பு

அசாம் மாநிலத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த மாநிலத்தின் காமாக்கியாவில் இருந்து தேகார்கான் நகருக்கு சென்ற இண்டர் சிட்டி விரைவு ரயில் உதல்குரி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த து. அப்போது இரண்டாம் வகுப்பு பயணிகள்...

சுற்றுலாப் பேருந்தில் திடீரென பிடித்த தீயால் பதற்றம்

அஸ்ஸாம் மாநிலம் ரூட் செரங்கா கல்லூரியைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து பாகமதி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். பேருந்தில் தீப்பிடித்ததையடுத்து மாணவர்கள் கீழே குதித்து தப்பி உயிரைக் காக்க ஓடினர். இதனால் பேருந்து முற்றிலும்...

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்த மத்திய அரசு 2016ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து...

அசாமில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகள்

அசாமில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சார் மாவட்டத்தில் ஜாய்ப்பூர் ((Joypur)) பகுதியில் நேற்று முழுஅடைப்பு நடந்து கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்குரியவகையில் 2 பேர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையில் துப்பாக்கி...

அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

அசாமில் தீவிரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என உல்ஃபா அமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. அசாமின் தின்சுகியா மாவட்டத்தில், பிஷ்னோய்முக் என்ற கிராமத்தில், நேற்று இரவு 7 மணியளவில் தீவிரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் வங்காளிகள்...

அஸ்ஸாமில் ஊருக்குள் புகுந்த காண்டா மிருகங்கள் அட்டகாசம்

அஸ்ஸாம் மாநிலம் லக்மிபுர் லகாசு குடியிருப்பு பகுதியில் 2 காண்டாமிருகங்கள் புகுந்தன. சீறிப்பாய்ந்து தறிகெட்டு ஓடிய இந்த காண்டா மிருகங்கள் அங்கிருந்த இரண்டு காளை மாடுகளை முட்டி மோதிக் கொன்றுவிட்டன. எதிரே வந்த நபரைத் தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்....

அசாமில் 46அமைப்புக்களின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவருவதைக் கண்டித்து அசாமில் பல்வேறு அமைப்பினர் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய...

அசாமில் அரசுப் பேருந்து குளத்திற்குள் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு

அசாமில் அரசுப் பேருந்து குளத்திற்குள் பாய்ந்து 7 பேர் பலியாகினர். கவுகாத்தியில் இருந்து முக்கல்முவா ((mukalmua)) நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்தது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக குளத்தில் குதித்து பலரை மீட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார்...

அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத்தில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத்தில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமின் கிழக்குப் பகுதியில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் கடந்த 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5...