கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தல், குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஆயிரத்து 178 பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
குடிநீர் பிரச்னை ஆண்டுதோறும் ஏற்படுகின்ற ஒன்று தான் எனவும் அதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 ஆயிரத்து 324 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.