​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்த ஐரோப்பிய நாடுகள்... ஐரோப்பிய நாடுகள் இரட்டை வேடம் போட வேண்டாம் என ஜெய்சங்கர் கண்டனம்

Published : Mar 05, 2024 1:24 PM

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்த ஐரோப்பிய நாடுகள்... ஐரோப்பிய நாடுகள் இரட்டை வேடம் போட வேண்டாம் என ஜெய்சங்கர் கண்டனம்

Mar 05, 2024 1:24 PM

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து கேள்வி எழுப்பிய மேற்கத்திய நாடுகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டித்து பேசியது பாராட்டுக்குரியது என ரஷ்யா கூறியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஐ.நா. மாநாட்டில் கலந்துகொண்ட ஜெய்சங்கரிடம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இந்தியாவை வாங்க வேண்டாம் என ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள் என ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார்.

ரஷ்யாவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்நிகழ்வை விவரித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், இந்தியாவின் மாண்பை விட்டுக்கொடுக்காமல் ஜெய்சங்கர் பேசியதாக பாராட்டினார்.