கோவையில் வி3 ஏட்ஸ் நிறுவனத்துக்கு சித்த மருந்துகளை தயாரித்து வழங்கிய விஜயராகவன் மீது இயற்கை மருத்துவத்தில் போலி டாக்டர் பட்டம் பெற்றது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை மதுரையில் கைது செய்தனர்.
அப்போது, நெஞ்சுவலிப்பதாக விஜயராகவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரை நள்ளிரவில் கோவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
மீண்டும் அவருக்கு ஏற்பட்டதிடீர் உடல்நலக்குறைவுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர், விஜயராகவனிடம் போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.