பொலிவியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.
லா பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்றின் கரையில் 25 மீட்டர் அகலத்திற்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோரம் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தில் உள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு லா பாஸ் நகர நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.