கோயம்புத்தூர் மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.
காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். கோயம்புத்தூர் மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.