​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயிகளின் பேரணியைத் தடுக்க டெல்லியில் பலத்த பாதுகாப்பு-பேரிகேடுகள் அமைப்பு

Published : Feb 13, 2024 10:31 AM

விவசாயிகளின் பேரணியைத் தடுக்க டெல்லியில் பலத்த பாதுகாப்பு-பேரிகேடுகள் அமைப்பு

Feb 13, 2024 10:31 AM

பஞ்சாபில் இருந்து 5 ஆயிரம் டிராக்டர்களுடன் புறப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், டெல்லியைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப விதிக்கப்பட்டுள்ளன.

தலைநகரின் உள்ளே விவசாயிகளை வரவிடாமல் தடுக்க போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்துள்ளனர். சிங்கூர், திக்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் சாலைப் போக்குவரத்தைத் தவிர்க்கவும், மெட்ரோ சேவையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.