அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கான கதவு மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கதவை உடைத்துக்கொண்டு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.-கள் பாஜகவில் வந்து இணைவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருவள்ளூரில், என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2 ஆண்டுகளுக்கு முன், முதலமைச்சரின் துபாய் பயணத்தின்போது ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்பட்டதாகவும், 6 ரூபாய் கூட இன்னும் வரவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.