​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பு

Published : Feb 08, 2024 7:26 PM

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பு

Feb 08, 2024 7:26 PM

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா ஆகிய நான்கு மாகாண சட்டசபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டுத் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

336 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 266 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கும் சுமார் 19 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுமார் 6 லட்சம் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடு முழுவதும் செல்போன் சேவையை உள்துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.