​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுகவும் பாமகவும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் அதிமுகவும் பாமகவும்தான் மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழரை அடி உயர சிலையை திறந்துவைத்தபின் பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறினார். ...

சாலை விபத்தில் உயிரிழந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்

சாலை விபத்தில் உயிரிழந்த ரஜினி மக்கள் மன்ற தர்மபுரி மாவட்ட செயலாளர் மகேந்திரன் குடும்பத்திற்கு ரஜினிகாந்த்தின் மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் ரூபாய் பணமும், அடகில் இருந்த வீட்டுப் பத்திரமும் மீட்டுத் தரப்பட்டுள்ளது. மகேந்திரன் மனைவி மற்றும் மகன்களை  சந்தித்த ரஜினிகாந்த்,...

மணப்பாடு கடற்கரைக்கு குடும்பம் குடும்பமாக திரண்ட மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த மணப்பாடு கடற்கரைக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பம் குடும்பமாகம் வந்துள்ளனர். நீண்ட நேரம் கடலில் குளித்து மகிழும் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவு வகைகளை கூடி உண்டு காணும் பொங்கலை கொண்டாடுகின்றனர்....

37 ஆண்டுகால மக்களின் கோரிக்கை நிறைவேற்றம்: அமைச்சர் தங்கமணி

பொதுமக்களின் 37 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய நிம்மதி தங்களுக்கு கிடைத்திருப்பதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த காமாட்சி நகரில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர்.சரோஜா ஆகியோர் பங்கேற்று, 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்...

சுற்றுலாத் தலங்களில் அதிகரித்து காணப்பட்ட மக்கள் கூட்டம்

விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மக்கள் அதிகளவில் திரண்டனர். கன்னியாகுமரி கடற்கரை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின்...

வடகொரியாவில் அணிவகுத்து வந்த மக்கள்

வடகொரியாவில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அந்நாட்டின் போனங்யெங் நகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தி வந்தனர். அவர்கள் தங்கள் நாட்டு தலைவர்களை வாழ்த்தி முழக்க மிட்டும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை வாழ்த்தியும்...

கன்டெய்னர்களில் இருந்து கரை ஒதுங்கிய டிவி, கார் பாகங்களை அள்ளிச் சென்ற மக்கள்

ஜெர்மனி அருகே பயணித்த கப்பலில் இருந்து விழுந்து கரையொதுங்கிய கன்டெய்னர்களில் இருந்து, டிவி, கார் பாகங்களை மக்கள் எடுத்துச் சென்றனர். MSC ஸோ ((ZOE)) என்ற கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட கன்டெய்னர்களில் 270 கன்டெய்னர்கள் மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்தது. அவற்றில்...

அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவுக்கு, பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், பழக்கடைகள், மளிகைப் பொருட்கள் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் விநியோகிக்கப்படுகின்றன. துணிப்பைகள் வழங்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் பலரும்...

தமிழகம் முழுவதும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தமிழகம் முழுவதும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பிற்பகல் 3 மணி முதலே ஏராளமானவர்கள் திரண்டனர்.  குழந்தைகள் ராட்டினம் சுற்றுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்திருப்பது...

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முதலிடம்

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து 11வது ஆண்டாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் உயர்ந்து...