டெல்லியில் பாஜக அரசை கண்டித்து முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய சித்தராமையா, நாட்டிலேயே வரி வசூலில் மகாராஷ்டிராவுக்கு பிறகு கர்நாடகா இரண்டாவது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் வசூல் செய்யப்பட்டு மத்திய அரசிடம் கொடுக்கப்படும் நூறு ரூபாய் வரியில் 13 ரூபாய் மட்டுமே திருப்பி அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.