பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தொலைபேசியில் அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிகச் சிறந்த நிர்வாகியான அத்வானி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்கு மிகப்பெரியது என்றும், அடித்தளத்தில் இருந்து பணியாற்றி நாட்டின் உள்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பணியாற்றிய அவர், துணைப் பிரதமராக உயர்ந்தவர் என்றும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.