தேசிய அளவில் இண்டியா கூட்டணி உடைந்ததைப் போல தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியும் உடையும் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறினார்.
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை மேற்கொண்டது.
இதன் பின்னர் பேட்டியளித்த டி. ஜெயகுமார், தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.