அயோத்தி ராமர் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர் சிலை, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் கொண்டுவரப்பட்டது.
வரும் 22-ஆம் தேதி மதியம் 12.20 மணிக்குத் தொடங்கி ஒரு மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலை பிரதிஷ்டை விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
கோயில் வளாகத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்கப்பட உள்ளன.