விவசாயிகளுக்கான அரசாக அ.தி.முக. அரசு நடைபெற்று வந்ததால் தான் 83 ஆண்டுகளாக தூர் வாரப்படாத மேட்டூர் அணையிலிருந்து வண்டல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் திண்டமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய இ.பி.எஸ்., தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா மூடியே கிடப்பதாக கூறினார்.
முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக இ.பி.எஸ்.ஸை மாட்டு வண்டியில் அமர வைத்து கட்சியினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.