டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழக பாரம்பர்ய முறைப்படி வேட்டி அணிந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் அரிசியை போட்டு விழாவை தொடங்கி வைத்த பிரதமர், அங்கிருந்த பசுமாட்டிற்கு உணவளித்தார்.
விழாவில் உரையாற்றிய பிரதமர், இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி அவர் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர்கள் தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.