​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளது... 2024ஆம் ஆண்டிலும் இதே வேகத்தை நாம் அனைவரும் தொடர வேண்டும்: பிரதமர் மோடி

Published : Dec 31, 2023 4:34 PM

இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளது... 2024ஆம் ஆண்டிலும் இதே வேகத்தை நாம் அனைவரும் தொடர வேண்டும்: பிரதமர் மோடி

Dec 31, 2023 4:34 PM

மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

புதிய ஆற்றல், புதிய வேகத்துடன் தொடர்ந்து முன்னேற வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

உலகளவில் புத்தாக்க மையமாக நாடு மாறி வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், 2015அம் ஆண்டில் சர்வதேச புத்தாக்க குறியீட்டில் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 40ஆவது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டில் விண்வெளி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா ஏராளமான சாதனைகளை படைத்ததாகவும், அவை 2024ஆம் ஆண்டில் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.