தென் அமெரிக்க நாடான பெருவில் அமேசானாஸ் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படைத் தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் படகுகள் மூலம் நீரை கடந்து செல்கின்றனர். எல் நினோ - தெற்கத்திய அலைவுகளே வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.