நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க கொலீஜியம் சிறந்த முறை அல்ல என்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமது 22 ஆண்டுகால பணியின் போது நீதிபதிகள் பலரை தாம் நியமனம் செய்ததாகவும், நீதிபதிகள் தேர்வின் போது அரசின் ஆளுமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரகசியமாக தேர்வுகளை செய்வதை விட திறந்தமுறையில் வெளிப்படையாக நீதிபதிகளைத் நியமனம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கவுல் குறிப்பிட்டார்.
இந்தச் செயல்பாட்டில் ஒரு கருத்தைக் கூற வேண்டும் என்ற அரசாங்கத்தின் இடைவிடாத வற்புறுத்தலுக்கு மத்தியில், பரிந்துரைகளை வழங்குவதில் நீதிபதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.