வடக்கு காஸாவில் பெரும்பாலான ஹமாஸ் நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், தற்போது தெற்கு காஸா மீது இரவு பகலாக குண்டுமழை பொழிந்துவருகிறது.
ஆறேகால் லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்துவரும் கான் யூனிஸ் நகரை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் இந்த தொடர் தாக்குதலை நடத்திவருகின்றன. வடக்கு காஸாவின் பெரும்பகுதியை இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த நிலையில், இஸ்ரேல் டாங்கிகள் மேலும் முன்னேறி வராமல் இருக்க ஹமாஸ் போராளிகள் கடுமையாக சண்டையிட்டுவருகின்றனர்.