வெள்ள நிவாரணத் தொகையை ரூ.6,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் : இ.பி.எஸ்
Published : Dec 10, 2023 6:12 PM
வெள்ள நிவாரணத் தொகையை ரூ.6,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் : இ.பி.எஸ்
Dec 10, 2023 6:12 PM
வெள்ள நிவாரணத் தொகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ள வாகனங்களுக்கு, பழுது நீக்கும் முகாம்கள் ஏற்பாடு செய்து அரசு செலவில் பழுது நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மணலி, எர்ணாவூர் பகுதிகளில் ஆயில் கழிவுகளால் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கூடுதலாக 25,000 ரூபாய் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தூய்மைப்படுத்துமாறும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
அம்பத்தூர் சிப்காட், 4 மாவட்ட தொழிற்சாலைகளில் மழை நீரால் இயந்திரங்கள், சாதனங்கள் பாதிப்புக்கு உள்ளாகியதால் அவற்றிற்கும் இழப்பீடுகள் வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.