​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனகாபுத்தூரில் 4ஆவது நாளாக மூடப்பட்டுள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலம் ஆய்விற்கு பிறகே அனுமதி

Published : Dec 07, 2023 4:44 PM

அனகாபுத்தூரில் 4ஆவது நாளாக மூடப்பட்டுள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலம் ஆய்விற்கு பிறகே அனுமதி

Dec 07, 2023 4:44 PM

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆய்விற்கு பிறகே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்லாவரம் மற்றும் குன்றத்துரை இணைக்கும் இந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால், சுமார் 5 கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றிக் கொண்டு பொதுமக்கள் செல்லும் நிலையில், மழைநீரின் வேகத்தால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.