தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை அகற்றுவதை தான் முதல் பணியாக செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியலில் திமுகவினர் கை வைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். 2ஜி 3ஜி 4ஜி போன்று பல தலைமுறைகளாக திமுகவினர் அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
திமுக காரர்கள் தலைகீழாக நின்றாலும் நீட்டில் உள்ள ஒரு வார்த்தையை கூட ஒழிக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் முட்டையில் இருந்து தற்போது புது அவதாரமாக புல்லட் பாண்டியாக அவதாரம் எடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுகவினரின் சாராய ஆலைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் 5ஆயிரத்து 500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்று அண்ணாமலை கூறினார். திமுக அரசிற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் டாஸ்மார்க் திராவிட மாடல் அரசு என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.