தமிழகத்தில் அனைத்து வகை பயணிகள் வாகனங்களையும் பொதுப்பயன்பாட்டு வாகனங்களாக , வாடகைக்கு பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் குறிப்பிட்ட மாடல்கள் தவிர தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை வாகனங்களையும் வாடகைக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் அனைத்து வகை வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.