டெல்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளதால், 4 நாட்களுக்கு மூடுபனி போன்ற நிலைமை நீடிக்கலாம் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400 அதிகமாகவே நீடித்து வருவதால், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ்-6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பயணிகள் பேருந்துகள் தவிர, மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் டெல்லியில் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு சுமார் 10 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் தீமைகளுக்கு சமம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.