புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகிறார்.
இதனால் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை வகுக்கப்பட்டது. இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மதுபான தொழிலதிபர் சமீர் மகேந்திரனுடன், அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளளது. ஏற்கனவே இதே வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதமும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சர் சிங் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தான், புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.