தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இருந்து அகமதாபாதிற்கு நீராவி ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி இணைப்பு மூலமாக கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
பாரம்பரிய சிறப்பு மிக்க நீராவி எஞ்சின் ரயில், நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பட்டேல் சிலை வரை இயக்கப்படுகிறது. ரயிலில் ஏசி உணவகம், தேக்குமர நாற்காலிகள், மேஜைகள், நவீன வசதிகளுடன் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நீராவியில் இயங்கும் ரயில் சுற்றுலா பயணிகளுக்கு பழங்கால நினைவுகளை அளிக்கும் என்றும் மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.