இஸ்ரேல்-ஹமாஸ் இடையே யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எகிப்து அதிபர் அப்தேல் ஃபத்தா எல் சிசியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலை அதிகப்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், அப்பாவி மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக எகிப்து செய்தித் தொடர்பாளர் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.