7வது இந்திய மொபைல் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து விழா அரங்குகளை பார்வையிட்டார்.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் இந்தியாவின் முன்னணி மொபைல் போன் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 கல்வி நிறுவனங்களுக்கு, 5ஜி தொழில்நுட்ப ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.
நிகர்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தங்கள் ஆட்சியில் 4ஜி விரிவுபடுத்தப்பட்டபோது, தங்கள் மீது எந்த கறையும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
சாம்சங்கின் ஃபோல்டு-5 மொபைல் போன்கள், ஆப்பிள் ஐபோன்-15 ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், மேட் இன் இந்தியா மொபைல் போன்களை உலகமே பயன்படுத்துவதாக பெருமிதம் தெரிவித்தார்.