பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களையும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திற்கான மீதமுள்ள வேட்பாளர்களையும் இறுதி செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வியூகம் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.