இந்தியாவின் முதல் ரேபிடெக்ஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் இருந்து மீரட் வரையிலான இந்த ரயிலின் பாதையில் 5 ரயில் நிலையங்களுடன் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பிரதமர் நாளை தொடங்கி வைத்த பிறகு அந்த வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவை தொடங்கும்.
இந்நிலையில் ரேபிடெக்ஸ் ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது டெல்லி-காசியாபாத்-துஹாய் மார்க்கத்தில் 5 ரயில் நிலையங்களுக்கு மட்டுமே ரயில் இயக்கப்படுவதால் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.