கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கான சூழல் குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் 100 மொழிகளுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் உற்பத்தியின் மூலமாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது குஜராத்தின் காந்திநகரில் புதிய உற்பத்தி நிறுவனங்களை கூகுள் தொடங்க உள்ளதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, இந்தியாவின் பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கூகுள் நிறுவனம் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து, டிசம்பரில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.