எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதால் திமுக அச்சத்தில் உள்ளதாகவும் கே.பி.முனுசாமி விமர்சித்தார்.
தமிழக பாஜக தலைமையை மாற்ற வேண்டும் என தாங்கள் கேட்கவில்லை என்று கூறிய கே.பி. முனுசாமி, முதிர்ந்த ஒரு கட்சி அப்படி கேட்காது என்றும் கூறினார்.