நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் விழிப்படைந்துள்ளதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு துணிவு வரவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளுக்கு தற்போது பயம் ஏற்பட்டுள்ளதால் பெண்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்காக நாடு கடுமையாக உழைக்கும் நிலையில், நாட்டை பின்னுக்கு தள்ளி 20ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் பிரதமர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களையும் விமர்சிப்பதையே காங்கிரஸ் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது, தரமான சாலை அமைப்பதற்கு கூட காங்கிரஸ் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.