அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளியதால் அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மனு செய்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜெயக்குமாரின் வாதங்களைக் கேட்டு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் செயல்படுவார்கள் என்றும், இனிமேல் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை என்றும் கூறி வழக்கை நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்தார்.