கேங்மேன் பணி வழங்கக்கோரி போராடிய இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர்களுக்கு உடனடியாக பணி ஆணைகளை வழங்கிடுமாறும் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசு 2021ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 613 பேருக்கு கேங்மேன் பணி ஆணைகளை வழங்கியதாகவும், 5 ஆயிரத்து 237 பேருக்கு பணி ஆணைகளை வழங்க தயார் நிலையில் இருந்தபோது, சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணி ஆணைகள் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20ஆம் தேதியன்று முதலமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 பேர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு சம்மன் வழங்கும் முயற்சியை காவல்துறை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.